நீலாங்கரையில் திபேத் மாணவர் சங்க தலைவர் கைது! – திபேத்தியர்களை குறிவைக்கும் போலீஸ்!

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (18:07 IST)
பிரதமர் மோடி – சீன அதிபர் சின்பிங் மாமல்லபுரம் வரவுள்ள நிலையில் பல்வேறு திபேத்தியர்களை தமிழக போலீஸ் கைது செய்து வருகிறது.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சின்பிங் இடையேயான சந்திப்பு எதிர்வரும் 11ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. சீன திபர் மாமல்லபுரம் வரும்போது அவருக்கெதிராக திபேத்தியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக இரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் தமிழகத்தில் தங்கி படிக்கும், பணிபுரியும் திபேத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திபேத் மாணவர் சங்க தலைவரான டென்சில் நோர்பு என்பவரை நீலாங்கரை போலீஸார் கைது செய்துள்ளனர். டென்சில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பு சேலையூரில் 8 திபேத்தியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். சீன அதிபரின் பாதுகாப்பின் பொருட்டே கைது செய்துள்ளதாகவும் சீன அதிபரின் சந்திப்பு முடிந்ததும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்