சுயநலம், பதவி வெறி காரணமாக அதிமுகவை கபளீகரம் செய்து வைத்துள்ளனர். அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்த பின்னும் கட்சியினரை ஏமாற்றுவதற்காக மெகா கூட்டணி என்று இபிஎஸ் சொல்லி வருகிறார். அவர் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட வேண்டுமானால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது சரியாக இருக்கும் என்றும், இல்லையென்றால் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவுரை எழுதி விடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான அதிமுகவினர் பாஜக கூட்டணியை விரும்புகின்றனர் என்றும், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற இபிஎஸ் எடுத்த முடிவு தவறானது என்றும், ஓபிஎஸ் போன்றவர்களை கட்சியிலிருந்து நீக்கி ஏதும் தவறு என்றும் அவர் கூறினார்.
ஒருவேளை அதிமுக இடம்பெறும் கூட்டணியில் நான் இருந்தால், இபிஎஸ் பயப்படுவார் என்றால் நான் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளவும் தயார் என்றும், என்னை சார்ந்தவர்களுக்கு மட்டும் தொகுதிகள் கிடைத்தால் போதும் என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார்.