கடந்த 60 வருடங்களாக சாதி வெறி கும்பலால் இந்தியா முழுவதும் அம்பேதகர் சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. அம்பேத்கர் பட்டியலின ஜாதிகளின் தலைவர் என போலியான பிம்பம் சமூகத்தில் இருப்பதால், பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மோதல் வரும்போது, அம்பேத்கர் சிலைகள் தாக்கப்படுகின்றன.
இந்நிலையில் மதுரை மேலூர் அருகே அம்பேத்கர் சுவர் ஓவியத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள், அம்பேத்கர் ஓவியத்தை அவமதித்த மர்ம நபரை கண்டுபிடிக்குமாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என்பதை மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள், பரப்புரை செய்யாததே அம்பேத்கர் உருவப்படங்களை அவமானப்படுத்துவதற்கு காரணம் என சிலர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.