சனாதன கைக்கலிகளைஅடையாளம் காண வேண்டும்: திருமாவளவன் ஆவேசம்..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (14:38 IST)
சனாதன கைக்கலிகளைஅடையாளம் காண வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
சனாதன- சங்பரிவார் கும்பலின் கைக்கூலிகளில் ஒருசிலர் அண்மைக் காலமாக  பறையர் அமைப்பு என்னும் பெயரில் விசிக'வுக்கு எதிராகவும் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராகவும் திட்டமிட்டு வீண் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
 
அவர்கள் வெளிப்படையாக பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரோடும் சங்கராச்சாரியாரோடும் தொடர்பு வைத்துக்கொண்டே, அவர்கள் வகுத்துத் தரும் வேலைத்திட்டத்தின் படி செயல்பட்டு வருகின்றனர்.  அந்த சனாதன அற்பர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரையும் பாட்டனார் ரெட்டமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர் ஆகியோரின் பெயரையும் பயன்படுத்திப் பிழைப்பு நடத்துகின்றனர். அந்தக் கும்பலைத்தான் மேலவளவு நிகழ்வில் கண்டித்தேன்.
 
பறையர் அமைப்புகளைச் சார்ந்த உண்மையான அம்பேத்ரியவாதிகளை அல்ல. சாதிப் பற்றாளர்கள் எல்லோரும் சனாதனக் கைக்கூலிகள் அல்ல. சனாதன கைக்கலிகளைத் தான் அடையாளம் காண வேண்டும். இது தேசத்தையே சனாதனப் பயங்கரவாதம் சூழும் பேராபத்தான காலமாகும். எனவே சனநாயக சக்திகள் யாவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்