சமூக பதற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் மோடி - தொல் திருமாவளவன் காட்டம்!

வெள்ளி, 30 ஜூன் 2023 (13:59 IST)
ஜூலை 30 மேலவளவு போராளிகளின் வீரவணக்க நாள் உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட பஞ்சாயத்து ராஜ் நகர் பாளிக சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்த போதுமேலவளவு பகுதியில் தலைவர் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பேர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து திரும்பும் போது வெட்டி கொலை செய்யப்பட்டனர் அதேபோல் அவர்கள் இறந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார் அதன் நினைவாக இன்று மேலவளவு போராளிகள் களத்தில் நினைவு தினம் அங்கு நடைபெறுகிறது
 
தமிழ்ல தான் ஆளுநர் ரவி தாந்துன்றித்தனமாக அமைச்சர் செந்தில் பாலாஜியை துறையில்லாத அமைச்சரையில் பதவியில் இருந்து நீக்கியதற்கும் பின்னர் அவற்றை நிறுத்தி வைப்பதாகவும் கூறியுள்ளார்அவர் ஆளுநராக பதவி ஏற்ற நாள் முதல் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதும் திரும்ப பெறுவதும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
 
அமைப்பு சட்டத்தை மதிக்காத ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்றிய அரசிற்கு தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் வலியுறுத்துகிறேன். மணிப்பூர் கலவரத்தில்மணமக்கள் கொல்லப்படுகிறார்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக புலம்பெயர்ந்து கிடக்கிறார்கள் இது ஒரு தேசிய பிரச்சனையாக இருக்கும் போது ராகுல் காந்தி அங்கு சாலை வழியாக சந்திப்பதை தடை செய்யும் சங்க பரிவார் அமைப்பு வெறுப்ப அரசியலை தூண்டி விடுகிறது.
 
மணிப்பூர் பிரச்சனையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் இதேபோல் தமிழக ஆளுநர் நடவடிக்கையில் குறித்தும் கலந்தாய்வு செய்வதற்கு மாண்புமிகு முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்  இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளது இந்துக்களுக்காக தனி சட்டங்களும் வாரிசுரிமை சட்டங்களும் சொத்து பிரச்சினை குறித்துக் சட்டங்களும் நடைமுறையில் உள்ளது.
 
இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கும் தனி தனி சட்டங்கள் உள்ளது அது மட்டும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக இந்திய அரசியலமைப்பு சட்டம் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தனி சட்டங்கள் உள்ளது இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் இல்லாமல் தனி சட்ட அமைப்போடு தான் நம்மோடு இணைத்தார்கள். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி திமுக காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சி பெயர்களை குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
கட்சிகள் ஒருங்கிணைந்தால் பாஜக எந்த அளவிற்கு மாற்றம் அடைகிறது என்பதை பிரதமர் மோடியின் முறையில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணை விடாமல் தடுக்க வேண்டும் அவர்களை அச்சுறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் திசைதிருக்கும் நடைவடிக்கையாக சங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
 
தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை இதிலிருந்து புலன் ஆகிறது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பிஜேபியை வீழ்த்துவது என்ற ஒரே இலக்கை முன்னுறுத்துவதுஎரிச்சலுக்கு காரணம், எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பிற்கும் ஒட்டுமொத்த தேசத்தை பாதுகாப்பதற்கும் போராடுகின்றனர் என்பதை அவர் அறியாமல் இல்லை.
 
இந்துக்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்று சமூகத்தை பழுது பிளவுபடுத்தி இந்து பெரும்பான்மை வாதத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆதாயத்தை தேடுவது பிஜேபி சங்பரிவார் காய் நகர்த்துகிறார்கள். டிவி சட்டம் பொது சிவில் சட்டம் ஏற்கனவே அரசியல் நிர்ணய சபையால் விவாதம் நடந்திருக்கிறது அம்பேத்கர் அதைப் பற்றி பேசி இருக்கிறார் திருமணம் மற்றும் வாரிசு ஆகியவை தவிர மற்ற அனைத்தும் எல்லா சமூக மக்களையும் வழிநடத்தக் கூடிய பொது சம்பவங்கள் தான் இருக்கின்றன.
 
மதசார்பற்ற அரசு மதசார்பின்மை தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மா அதற்கு எதிராக இந்திய அரசியலை பேசக்கூடிய சங்கர் அவர்கள் மக்களை பதட்டத்திற்கு உள்ளாக்குகிறார்கள். சிவில் சட்டம் என்ற விவாதம் பிரதமர் மோடியாக இருந்தாலும் சரி அமித்ஷாவாக இருந்தாலும் சரி பதற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் மக்கள் இதை முறியடிப்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் அதன் அடிப்படையிலேயே மாண்புகளை கடைபிடிக்க வேண்டும் என திருமாவளவன் கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்