காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பற்றி திருமாவளவன் எம்.பி., கருத்து!

sinoj
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (16:21 IST)
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
 
எனவே அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், கடந்த 2 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜகவை வீழ்த்த வேண்டுமென காங்., திமுக, திரிணாமுல் காங்., உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கியுள்ளன.
 
சமீபத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவித்து, வேட்புமனுதாக்கலும் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைமை மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
 
இதற்கு இந்தியா கூட்டணி கட்சியினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் கூறியதாவது;
 
மத்திய அரசுப் பணியில் பெண்கள் இட ஒதுக்கீடு ஒரு புரட்சிகரமான திட்டம்.
 
சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை மீண்டும் வழங்குவது நல்லது. நீட் தேர்வில் மாநில அரசின் முடிவிற்கே விடுவது நல்லது.
 
இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை உயர்த்துவது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வை உயர்த்துவது நல்ல திட்டம் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், பொதுபட்டியலில் உள்ளவற்றை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது மாநில மக்களின் உணர்வுகளை மதிப்பதாக உள்ளது. இத்தேர்தல் அறிக்கை இந்தியா கூட்டணிக்கு வலுச்சேர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்