வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துங்கள்- தேர்தல் அதிகாரி கடிதம்

sinoj

வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (14:52 IST)
தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்  நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில்,  தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் நடைபெறவுள்ளதால், தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் எல்லாம் அடிப்படை வசதிகள் செய்து தரும்படி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தழ்மி நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில்,  மக்களவை தேர்தலையொட்டி, வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
 
வாக்குச் சாவடிகளில் 15க்கு 15 அடி அளவில் பந்தல் போடப்பட்டு அதில் வாக்காளர்கள் காத்திருப்பதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
 
வாக்குச்சாவடிகளில் உதவி மையம், குடிநீர், கழிவறை, சாய்வு தளம், மின் இணைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை செய்து தர வேண்டும்.
 
குழந்தைகளுடன் வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கான வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்