பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு – பாஜக பிரமுகர் கைது!

sinoj

வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (15:57 IST)
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கர்நாடகம் மாநிலத்தில்  முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பெங்களூரு-ல் உள்ள ராமேஸ்வரம் காஃபி  உணவகத்தில்  சமீபத்தில் திடீரென குண்டுவெடித்தது.
 
இந்தக் வெடிகுண்டு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது.
 
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு ஏஜென்சி என்.ஐ.ஏ மற்றும் பெங்களூரு போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
 
இந்த நிலையில்,   வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தான் கொண்டு வந்த பையை அங்கேயே வைத்துவிட்டு சென்றார். அந்த பையில் இருந்துதான்  வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இது உறுதியான நிலையில், முகக்கவசம் அணிந்து வந்த நபரின்  புகைப்படத்தை வெளியிட்டு,  இந்த நபரைக் கைது செய்வதற்கு முக்கிய தகவல்களை அளித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாக தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,  அறிவித்தது.
 
இந்த சம்பவம் தொடர்பாக,  என்.ஐ.ஏ மற்றும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள்  ஜவுளி வியாபாரி ஒருவரை கைது செய்தனர். 
 
இந்த நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இன்று பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
சிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சாய் பிரசாத்தை என்.ஐ.ஏ அமைப்பு கைது செய்துள்ளதாக கன்னட ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்