அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தியின் கணவர் போட்டியா? நீடிக்கும் சஸ்பென்ஸ்..!

Siva

வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (14:29 IST)
அமேதி தொகுதியில் இன்னும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் இந்த தொகுதியில் பிரியங்கா காந்தியின் கணவர் வதேரா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் ஏப்ரல் 19 முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் வதேரா தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும் அவர் அனேகமாக அமேதி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

காந்தி குடும்பத்தினர் மீது அமேதி தொகுதி மக்கள் மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருப்பதாக வைத்திருந்தார்கள் என்பதும் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இந்த தொகுதியில் வதேரா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்