யாரது? பசங்களுக்கு பஸ்ஸை நிறுத்தாம போனது? - மாணவன் புகாரில் அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Prasanth Karthick
திங்கள், 3 பிப்ரவரி 2025 (12:18 IST)

அரியலூரில் அரசு பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுனர் திட்டியதாக பள்ளி மாணவன் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் சிவசங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிராமம் தொடங்கி நகரங்கள் வரை பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் இலவச பயண அட்டையில் பயணிக்கும் மாணவர்களை சில நடத்துனர்கள், ஓட்டுனர்கள் தரக்குறைவாக நடத்துவதாக புகார்களும் ஆங்காங்கே இருந்து வருகிறது.

 

இந்நிலையில் சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த எழுமூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.  அப்போது 8ம் வகுப்பு மாணவர் ஒருவரும், அவரது நண்பர்களும் அமைச்சர் சிவசங்கரை சந்தித்து புகார் ஒன்றை அளித்தனர். 

 

ALSO READ: திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே..? இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்! - மதுரையில் 144 தடை உத்தரவு!

 

அதில், அரியலூரில் இருந்து தொழுதூருக்கு சென்ற அரசு பேருந்தில் எழுமூர் செல்வதற்காக சிறுவன் உட்பட 3 பேர் கைநீட்டிய போது, பேருந்தை நிறுத்தாமல் சென்றதுடன், மோசமான வார்த்தைகளில் ஓட்டுனர் திட்டியதாகவும், மாணவர்கள் புகாரில் தெரிவித்திருந்தனர்.

 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்ட நிலையில் ஓட்டுனர் திருமூர்த்தி என்பவரை பணியிடைநீக்கம் செய்து அரியலூர் பணிமனை மேலாளர் குணசேகரன் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் புகாரின் பேரில் எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்