இந்த ராக்கெட்டில் என்.வி.எஸ் 02 என்ற செயற்கைக்கோள் . இந்த ராக்கெட் மூலம் ஏவப்பட்ட நிலையில், புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்ட பாதைகளில் உயர்த்தும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாக இன்று காலை கூறிய நிலையில், தற்போது புவி வட்ட பாதையில் இருந்து மற்றொரு புவிவட்ட பாதைக்கு செல்வதில் சிக்கல் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மாற்று உத்திகளை ஆராய்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயல்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது. மாற்று வழியில் மிக துல்லியமாக செயற்கைக்கோள் புவிவட்ட பாதை சுற்றுப்பாதையை அடைந்துள்ளது என்றும், செயற்கைக்கோளில் உள்ள சூரிய பேனல்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.