கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என்றும், கோவில்களில் பக்தர்கள் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், எனவே முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் முன்பதிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துள்ளது.
யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கக்கூடாது என்று நீதிபதிகளாக நாங்கள் கருதலாம், ஆனால் ஒரு நீதிமன்றம் அதை முடிவு செய்ய முடியாது. சமுதாயம் மற்றும் கோயில் நிர்வாகம் தான் அதை முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு உரிய பொருத்தமான வழக்கு இது இல்லை. இருப்பினும், இந்த மனுவை நான் தள்ளுபடி செய்தாலும், அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கோவில்களிலும் விஐபி தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலித்து முக்கிய பிரமுகர்களை அனுமதிக்கின்றனர். ஆனால் பல மணி நேரம் காத்திருக்கும் ஏழை எளிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிரமப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக மனுதாரர் கூறினார். ஆனால், உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரணை செய்ய மறுத்து தள்ளுபடி செய்து விட்டது. இதன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.