ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

Siva

வியாழன், 24 அக்டோபர் 2024 (16:31 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார்.
 
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்  இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது இதுகுறித்து மேலும் கூறியதாவது:
 
ஆம்னி பேருந்துகளில் அதிகம் கட்டண வசூலிப்பதாக பெறப்படும் புகார்களையடுத்து, அரசு சார்பில் Toll Free எண் வெளியிடப்பட்டுள்ளது; 
 
தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு ஏதேனும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டண வசூலிப்பதாக எங்களுக்கு புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நிச்சயம் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்;
 
பயணத்தை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்கு எந்தவித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன"
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்