கெர்சன் நகரை கைப்பற்றிய ரஷிய ராணுவம்! பொதுமக்கள் கடும் அவதி!~

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (23:08 IST)
ரஷியா ராணுவம் உக்ரைன் மீது 9 மாதமாக தொடர்ந்து போர்தொடுத்து வருகிறது. மேற்கத்திய  நாடுகளின் உதவியால் உக்ரனும், ரஷியாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

இனந்த நிலையில், உக்ரைன் நாட்டிலுள்ள கெர்சன் நகருக்குள் புகுந்துள்ள ரஷிய ராணுவத்தினர்,  மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்து,  அங்குள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்வதாக உக்ரைன் அரசு தற்போது புகார் தெரிவித்துள்ளது.

மேலும், மக்களின் அத்தியாவசியமான மின்சாரம், குடி நீர் போன்ற இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  மக்கள் அரசிடம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனன.

ஆனால், ரஷிய ராணுவத்தினரை வெளியேற்றும் வரை இந்த அத்தியாவசிய இணைப்புகளை துண்டித்தது உக்ரைன் ராணுவம் என ரஷியா கூறியுள்ளது.

இதனால், அப்பாவி 3லட்சத்திற்கும் மேற்பட்ட  மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்..

..
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்