ஒரு கிராமம் முழுவதுமே சோலார் மின்சாரம்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (11:58 IST)
ஒரு கிராமம் முழுவதுமே சோலார் மின்சாரம்: பிரதமர் மோடி பெருமிதம்!
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் முழுவதுமே சோலார் மின்சாரம் பயன்படுத்துவதை பெருமையுடன் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள மோதேரா என்ற கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்துமே சூரிய மின்னாற்றல் கொண்டு மின்சாரம் பயன்படுத்தப்படுவதை அடுத்து இந்த கிராமம் இந்தியாவின் முதல் முழு சூரிய மின்னாற்றல் கிராமமாக பிரதமர் மோடி இன்று அறிவிக்கிறார்
 
பிரதமர் மோடி இந்த கிராமத்திற்கு வருகை தர இருப்பதாகவும் அவர் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 1300 வீடுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் சோலார் பேனல்கள் இலவசமாக பொருத்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய மாநில அரசுகள் இணைந்து ரூபாய் 80 கோடி ரூபாய் செலவில் இது நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து இந்த கிராமம் முழுக்க முழுக்க சோலார் கிராமமாக மாறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களும் கிராமங்களும் சோலார் பவரை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்