100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறிதான்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திங்கள், 12 செப்டம்பர் 2022 (15:06 IST)
100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விகுறி தான் என முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் பேட்டியில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் மின்சார கட்டண உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது என்பதும் மின்சார கட்டணம் வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமார் மின்சார கட்டண உயர்வு பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது என்றும் இது மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்
 
மேலும் 100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறி என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் ஏழை எளிய மக்கள் மற்றும் வியாபாரிகள் தொழில் முதலீட்டாளர்கள் இதனால் பெரும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்
 
இனி வருடத்துக்கு 6 சதவீதம் மின்சார கட்டணம் உயர்த்தப்படும் என்றும் சூசகமாக சொல்லப்பட்டு ள்ளது என்றும் இது சாமானிய மக்கள் மீது அரசு ஏற்று உள்ள பெரும் சுமை என்றும் அவர் தெரிவித்தார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்