500 ரூபாய்க்கு சிலிண்டர், இலவச மின்சாரம்: குஜராத்தில் காங்கிரஸ் அறிவிப்பு!

வியாழன், 3 நவம்பர் 2022 (20:14 IST)
500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் மற்றும் இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளை குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. 
 
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்கனவே பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் களமிறங்கியுள்ளது 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் இன்று குஜராத் மாநில மக்களுக்கு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் தரப்படும் என்றும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் என்றும் அனைவருக்கும் 10 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வேலை இல்லாத இளைஞர்களுக்கு 300 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்