தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது: செல்வப்பெருந்தகை

Siva
புதன், 8 ஜனவரி 2025 (13:54 IST)
தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக சட்டசபையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி கருத்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் ஒரு பிரச்சனையை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறும் முதல்வர் அல்ல முக ஸ்டாலின் என்றும் கூறினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’ஞானசேகரனிடம் செல்போனில் பேசியது யார் என்பதை மத்திய அரசுதான் வெளியிட வேண்டும் என்றும் செல்போன் அழைப்புகள் தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை வாக்கு வங்கி அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்றும் பாலியல் வன்கொடுமை விஷயத்தை அரசியலாக்குவது பெரும் கொடுமை என்றும் அவர் கூறினார்.

மேலும் ஒரு விரல் மற்றவரை சுட்டிக்காட்டினால் மற்ற விரல்கள் உங்களை காட்டும் என்றும் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்