முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உதவித்தொகை.. தமிழக அரசு முடிவு..!

Mahendran

புதன், 8 ஜனவரி 2025 (08:41 IST)
இந்த மாதம் மகளிர் உதவி தொகை 1000 ரூபாய் முன்கூட்டியே வரவு வைக்க  தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உதவி தொகையாக ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மாதம் வரும் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை என்பதால், முன்கூட்டியே அதாவது ஜனவரி 10ஆம் தேதியே வரவு வைக்கப்படும் என தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பொங்கல் கொண்டாடும் மக்கள் செலவுக்கு அந்த பணம் உதவும் என்பதாலும், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஜனவரி 11ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், வங்கிகளுக்கு  விடுமுறை ஆகும். எனவே ஜனவரி 10ஆம் தேதியே இந்த மாதம் மகளிர் உரிமை தொகையை வழங்கிவிடலாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, அனைத்து மகளிர் உரிமை தொகையை பெறுபவர்கள், இந்த மாதம் மட்டும் 10ஆம் தேதியே அவர்களது வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், பொங்கல் கொண்டாடும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்