மனைவியை வெட்டிக் காட்டில் புதைத்த கணவன்!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (21:22 IST)
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் தன் மனைவியை வெட்டிக் காட்டில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் என்ற பகுதியில் வசித்து வருபவர் ராம் பட்டேல். இவருக்கும் இவர் மனைவி சரஸ்வதிக்கும் இடையே வீட்டில் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தது.

 இப்படி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்தபோது, சில நாட்களுக்கு இருவரும் பேசிக் கொள்வதில்லை  என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தன் மனைவி சரஸ்வதியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட  ராம் பட்டேல், காட்டிற்கு அழைத்துச் சென்று தன் மனைவி வெட்டிப் புதைத்துள்ளார்.

சரஸ்வதியைக் காணாத நிலையிலும், காட்டில் ஒரு பெண்னை புதைத்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வந்த காவல்துறையினர், ராம் பட்டேலை கைது செய்த விசாரித்தனர்.

அதில், தன் மனைவி சரஸ்வதியை கோடாரியால் வெட்டிக் கொன்றதாக வாக்குமூலம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்