மனைவி இறந்துவிட்டதாக பேனர் வைத்த கணவரால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (17:00 IST)
இன்றைய உலகில் வீட்டில் எந்த விசேசம் என்றாலும், நிகழ்ச்சி என்றாலும், அரசியல் நிகழ்ச்சிகளுக்கும்கூட பேனர் வைக்கும் பழக்கும் அதிகரித்துவிட்டது.

சமீபத்தில் ஒரு அரசியல் தலைவரின் பிறந்த நாளுக்கு சினிமா நடிகர்கள் மாதிரி அவரது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து கட் அவுட் பேனர் வைத்தனர்.

இந்த நிலையில் மற்றொரு சம்பவம் நடைபெற்றது. ஆனால், இந்தச் சம்பவம் எல்லோருக்கும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கிருஷ்ணகிரியில் தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  கணவன், மனைவி இருவரும் விவாகரத்து கோரியுள்ள நிலையில், மனைவி தன் மனைவி இறந்துவிட்டதாக பேனர் வைத்துள்ளார் கணவர். அதில், ’’தன் மனைவி இறந்துவிட்டதாக தேதி குறிப்பிட்டு, இறுதிச் சடங்கு நடைபெற்றும் நாளையும் குறிப்பிட்டு, பிரிவில் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்’’ என்று தெரிவித்துள்ள்ளார்.

இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்