கிராம மக்களுக்கு பரிசு கொடுத்து திருமணம் செய்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள்

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (18:44 IST)
கிராம மக்களுக்கு பரிசு கொடுத்து திருமணம் செய்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள்
பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தங்களுடைய திருமணத்தை முடித்த பின்னர் தங்களுடைய சொந்த கிராம மக்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொடுத்து உதவியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது 
 
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் என்பவருக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் திட்டமிட்டபடி திருமணம் நடத்த முடியவில்லை. இந்த நிலையில் இன்று இந்த திருமணம் ரஞ்சித்தின் சொந்த கிராமத்தில் மிக எளிமையாக நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்
 
இந்த நிலையில் மிகவும் பிரமாண்டமாக இந்த திருமணத்தை நடத்த முடிவு செய்த இந்த தம்பதிகள் லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வைத்திருந்ததாகவும், ஆனால் தற்போதும் எளிமையாக திருமணம் நடந்துவிட்டதால் அந்த பணம் மிச்சமானதாகவும், இதனை அடுத்து அந்த பணத்தை தங்களது கிராமத்தில் உள்ள 450 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வாங்கி கொடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது,  மணக்கோலத்துடன் மாலையும் கழுத்துமாக உதவி பொருட்களை ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்களே சென்று கொடுத்தனர் என்பதும், அந்த பொருட்களை வாங்கிய பொதுமக்கள் இந்த தம்பதிகளை மனதார பாராட்டினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்