இன்று திருமணமான பெண்ணுக்கு கொரோனா அறிகுறி: தாலி கட்டியதும் தனிப்படுத்தப்பட்டார்

ஞாயிறு, 24 மே 2020 (14:40 IST)
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது போல் திருமணத்திற்கும் ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து சேலத்தில் இன்று நடந்த ஒரு திருமணத்தில் மணப்பெண்ணிற்கு திடீரென கொரோனா அறிகுறி இருந்ததால் உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
தாலி கட்டிய ஒரு சில நிமிடங்களிலேயே அந்த மணப்பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தபோது பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததால் மணமகன் உள்பட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மணமகன் உள்பட திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்