காதலியை தீ வைத்து எரித்த காதலன் கைது!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (20:29 IST)
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை காதலன் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள ராயர்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் பூஜா(19). இவர் லோகேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இவரும் சில நாட்களாக காதலித்து வந்த நிலையில், இன்று இருவரும் ஒரு காட்டுப்பகுதியில் சந்தித்துள்ளனர்.

அப்போது, பூஜா தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி லோகேஷிடம் வற்புறுத்தியுள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த லோகேஷ், பூஜாவைத் தாக்கி, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், பூஜாவில் உடலில் 90% தீக் காயம் அடைந்துள்ள நிலையில் திருப்பூர் அரசு   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது, கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக லோகேஷை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்