தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:59 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 34 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும்  நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில்,சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தேனி,தென் காசி, திருப்பூர்,புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், திண்டுக்கல்,  காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை  பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேலும், நாளை முதல் தென் தமிழகம், மேற்கு தமிழகத்தின் சில பகுதிகளில், மழை மேலும் குறையும் என்றும், பெரும்பாலான பகுதிகள் டிசம்பர் 18 வரை வறண்ட நிலையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்