ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

Mahendran

திங்கள், 16 செப்டம்பர் 2024 (16:54 IST)
மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை தற்போது நிலவும் அரசியலமைப்பின் கீழ் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்றும், இதற்காக குறைந்தபட்சம் ஐந்து அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்றும்  தெரிவித்துள்ளார்.
 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்த ஆட்சிக்காலத்திலேயே "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
 
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், ’இதற்கான அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தற்போதைய அரசுக்கு தேவையான பெரும்பான்மை இல்லை’ என்று கூறினார்.
 
சிதம்பரம் மேலும் கூறுகையில், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்பதற்கு அரசியலமைப்பு ரீதியாக பல தடைகள் உள்ளன. இது நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று, மேலும் இந்தியா கூட்டணி இந்த கருத்துக்கு முற்றிலும் எதிராக உள்ளது" என்று கூறினார்.
 
முன்னதாக கடந்த மாதம் சுதந்திர தின உரையில், ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற கொள்கையை வலியுறுத்தி பேசியிருந்தார். அத்துடன், அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றன என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்