இரண்டு நந்திகள் உள்ள திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்!

வெள்ளி, 18 நவம்பர் 2022 (19:57 IST)
இரண்டு நந்திகள் உள்ள திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்!
தமிழகம் என்பது ஆன்மீக பூமி என்பதும் இங்கு ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் இரண்டு நந்திகள் அமைந்துள்ள திருப்பூர் அருகே உள்ள சுக்ரீஸ்வரர் கோயில் பெருமை குறித்து தற்போது பார்ப்போம். 
 
ராமாயணத்தில் ராமருக்கு உதவியாக இருந்தவர் சுக்ரீவன் என்பது ராமாயண படித்த அனைவருக்கும் தெரிந்ததே. அந்தவகையில் சுக்ரீவனுக்கு கோயில் இருக்குமிடம் திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் பாதையில் உள்ளது
 
இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயில் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது. மூலவர் சுக்ரீஸ்வரர் லிங்கவடிவில் இருப்பார் என்பதும் அதேபோல் ஆவுடை நாயகி அம்மன் வடிவில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
நீர் நிலம் காற்று ஆகாயம் நெருப்பு என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பஞ்சலிங்கங்கள் இந்த கோயிலில் அமைந்துள்ளன. தொல்லியல் துறை இந்த கோவிலை கடந்த 1952 ஆம் ஆண்டில் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து வந்தது என்பதும் அதன் பிறகு இந்த கோயில் புனரமைக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த  கோவிலில் இரண்டு நந்திகள் என்ற உள்ளது கூடுதல் சிறப்பாகும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்