மீண்டும் தமிழகத்திற்கு காத்திருக்கும் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (09:19 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதலாக நிவர் மற்றும் புரெவி புயலால் கனமழை பெய்து வந்தது. இதனால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக எதிர்வரும் 16 மற்றும் 17 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்