கோவிலை தோண்டியபோது தங்க புதையல்; அரசிடம் கொடுக்க மறுக்கும் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (08:57 IST)
காஞ்சிபுரம் அருகே கோவில் புனரமைக்க தோண்டியபோது கிடைத்த தங்க புதையலை மக்கள் கொடுக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே உத்துரமேரூர் பகுதியில் உள்ளது 500 ஆண்டுகள் பழமையான குழம்பேஸ்வரர் கோவில். இந்த கோவிலை புனரமைக்க அக்கிராம மக்கள் கோவிலை இடித்து தோண்டியுள்ளனர். அப்போது கோவிலுக்கு கீழே புதைக்கப்பட்ட தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தங்க காசுகள், ஆபரணங்கள் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்தவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதில் சில தங்க நாணயங்களை கிராம மக்கள் சிலர் எடுத்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தங்கத்தை கேட்க சென்ற உத்திரமேரூர் வட்டாட்சியர் ஏகாம்பரத்திடம் தங்கத்தை கொடுக்க முடியாது என அம்மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்