ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டறிய ஆய்வகங்கள்! – தமிழக மருத்துவத்துறை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (13:06 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸை கண்டறிய ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா வந்த ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அது ஒமிக்ரான் பாதிப்பா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் பரவாமல் ஆரம்பத்திலேயே தடுக்க பல்வேறு முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 12 இடங்களில் ஒமிக்ரான் வைரஸ் சோதனை மேற்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. Taqpath என்ற கிட் மூலம் ஒமிக்ரான் கொரோனா ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்