தமிழகத்திற்கு இனி நோ ஊரடங்கு: ஈபிஎஸ் நம்பிக்கை!

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (09:03 IST)
தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
நேற்று தமிழகத்தில் 4,538 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,907ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 4,538 பேர்களில் 1,243 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83,371 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதிக்கு பின்னரும் நீடிக்குமா என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. 
 
கொரோனா பரவலைத் தடுக்க வீடு வீடாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும். இதனால், வரும் நாட்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்