யார் இந்த Corona Kumar? டிவிட்டர் டிரெண்டிங்கின் பின்னணி என்ன??

சனி, 18 ஜூலை 2020 (08:42 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #CoronaKumar என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
மகாராஷ்டிரா, டெல்லியை போன்று பீகாரிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது அந்த மாநிலத்தில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து உள்ளது. 
 
இந்நிலையில், பீகாரில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை பற்றிய சரியான நடவடிக்கைகள் இல்லாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 
மேலும், காரில் கடந்த மாதம் ரூ. 260 கோடி செலவில் கட்டப்பட்டு முதல்வர் நிதீஷ் குமாரால் திறந்து வைக்கபப்ட்ட பாலத்தின் ஒரு பகுதி கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 
இந்நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Corona_Kumar என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரை தான் கொரோனா குமார் என குறிப்பிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்