ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு நபரைப் பார்த்த அணில் தனக்கு தாகம் எடுப்பதாகக் கூறி மனிதன் போன்று சைகை காட்டி அவரிடம் தண்ணீர் கேட்டது. அதைப் பார்த்த அந்த நபர் சற்றுப் புரியாமல் திகைத்தார். பின்னர் அவரது கையில் உள்ள தண்ணீரைப் பார்த்துதான் அது சைகைக் காட்டுவது தெரிந்ததும் உடனே பாட்டில் மூடியைக் கழட்டி அதன் வாயில் நீரை ஊற்றினார்.