மறைக்க எதுவும் இல்லை: ஆபத்தான 3 ஆம் நிலையை எட்டிய கொரோனா!

சனி, 18 ஜூலை 2020 (07:49 IST)
கேரளாவில் கொரோனா சமூக பரவலை எட்டிவிட்டது என ஒப்புக்கொண்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். 
 
இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில் தான் கொரனோ வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கேரளாவில் கொரனோ பாதிப்பு படிப்படியாகக் குறைந்தது. 
 
ஒரு கட்டத்தில் கேரளா கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக மாறி விடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கேரளாவில் கொரனோ வைரஸ் பாதிப்பில் நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியது. 
 
ஆம், கேரளாவில் நேற்று ஒரே நாளில் 791 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனை அடுத்து கேரளாவில் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,066 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, 
மேலும் கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 4,994 என்பதும் பலி எண்ணிக்கை 39 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா சமூக பரவலை எட்டும் நிலையில் உள்ளோம் என கூறிக்கொண்டிருந்த அம்மாநில முதல்வர் தற்போது அதை ஒப்புக்கொண்டுள்ளார். 
 
ஆம், கேரளாவில் கொரோனா சமூக பரவலை எட்டிவிட்டது என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அங்கு ஊரடங்கு நடைமுறைகள் அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்