ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது போட்டித் தேர்வுகளில் பங்கேற்கச் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் சில உடனடி கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின்னர் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிலையில் ஞாயிறன்று முழு ஊரடங்கு நாளில் போட்டி, நேர்முக தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தேர்வு எழுத செல்வோருக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேர்வுக்கு செல்பவர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதத்தை காண்பித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.