இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு!

புதன், 5 ஜனவரி 2022 (15:54 IST)
தமிழகத்தில் ஞாயிறன்று முழு ஊரடங்கு என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இ
 
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் அதே நேரத்தில் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இரவு நேர ஊரடங்கான இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கடைகள் உணவகங்கள் வணிக வளாகங்கள் மற்றும் அணிகலன்கள் செயல்பட அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்