செமஸ்டர் தேர்தல் காப்பி அடித்து மாட்டிக்கொண்ட மாணவர்.. அவமானத்தில் தற்கொலை,..!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (17:10 IST)
செமஸ்டர் தேர்வில் காப்பி அடித்து மாட்டிக்கொண்ட மாணவர் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி என்ற பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை அந்த கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த 19 வயது கோகுல் ராம் என்பவர் எழுதினார்.

இந்த நிலையில் கோகுல்ராம் செமஸ்டர் தேர்வில் காப்பி அடித்ததாக தெரிகிறது. ளி இதனை தேர்வு கண்காணிப்பாளர் கையும் களவுமாக பிடித்து விட்டார். செமஸ்டர் தேர்வில் காப்பி அடித்து  கையும் களவுமாக பிடிபட்டதால் அவமானம் அடைந்த கோகுல்ராம் ஐந்தாவது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு  செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்