நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பால் தனியார் மருத்துவக் கல்லூரிகளே லாபம் என தகவல்

புதன், 29 நவம்பர் 2023 (18:45 IST)
இந்தியாவில் நீட் தேர்வால் தனியார் கல்லூரிகளே லாபம் அடைந்திருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பனிரென்டாம் வகுப்பு முடித்த பின், மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து இதற்கெனப் பிரத்யேகமாகப் படித்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அப்படிப்பில் சேர்ந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  நீட் தேர்வால் தனியார் கல்லூரிகளே லாபம் அடைந்திருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
 
அதில்,  மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பால் 2020-ல் 67 % இடங்களும் 2021-ல்  68% இடங்களும் மருத்துவக் கல்லூரிகளில் நிரம்பியுள்ளன.  மருத்துவ மேற்படிப்பு நீட் கட் ஆப் அதிகமாக இருந்தபோதே அரசு மருத்துவக் கல்லூரிகளில் 80-90 % இடங்கள் நிரம்பி வந்தன எனவு, நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 35 ஆயிரம் எம்.டி., எம்.எஸ் படிப்புகான இடங்கள் உள்ளன எனவும், எம்.டி. எம்.எச். படிப்புக்கான நீட் தேர்வை எழுதிய 1.6 லட்சம்   பேரில் 96 ஆயிரம்   பேர் படிப்பில் சேரத் தேவையான மதிப்பெண்களை பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்