ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி என்ன?

வியாழன், 30 நவம்பர் 2023 (17:03 IST)
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தினம் இன்று என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை சற்றுமுன் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30ஆம் தேதி அதாவது இன்று கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அவகாசத்தை நீட்டி தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 
 
ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு தமிழ் ஆங்கிலம் ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்