கராத்தே மாஸ்டரை கடத்தி கும்மியெடுத்த கும்பல்! – பரபரப்பு வாக்குமூலம்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:51 IST)
சேலத்தில் பாலியல் புகாரில் கைதான கராத்தே மாஸ்டரை முன்னரே ஒரு கும்பல் கடத்தி தர்ம அடி கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சேலம் மாவட்டம் சீலியம்பட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கராத்தே மாஸ்டர் ராஜா மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் கடத்தப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது. போலீஸார் கைது செய்யும் முன்னதாக ராஜாவுக்கு போன் செய்த மர்ம கும்பல் உணவுக்கு மொத்த ஆர்டர் கொடுப்பது போல வர சொல்லி அவரை கடத்தியுள்ளனர். 8 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்று தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு அவரை விரட்டியுள்ளனர். அதன் பிறகு போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை தாக்கிய 8 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கராத்தே மாஸ்டர் ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கராத்தே மாஸ்டரை கடத்திய கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களா? அல்லது வேறு யாருமா? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்