ஒவ்வொரு நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை இருக்கும் நிலையில் 2024-25ம் நிதியாண்டிற்கான முடிவுகளை அரசு மார்ச் 31க்குள் நிறைவு செய்ய வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இதனால், வங்கிகள் இன்று வழக்கமான நேரத்தில் செயல்பட வேண்டும் என்று ஆர்பிஐ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அனைத்து வங்கிகளும், அரசின் வருமான, செலவு கணக்குகளை நிர்வகிக்கும் கிளைகளும் மார்ச் 31ஆம் தேதி வழக்கம்போல் இயங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அரசு பரிவர்த்தனைகளுக்காக கவுன்டர்கள் திறந்திருக்கும் என்றும், அந்த நாளில் பதிவான காசோலைகள் சரியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2024-25 நிதியாண்டுக்கான அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் சரியாக கணக்கிட, மார்ச் 31 அன்று அரசு காசோலைகளுக்காக CTS முறையில் சிறப்பு தீர்வு மேற்கொள்ளப்படும். அரசுக்குக் கடைப்பிடிக்க வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை அந்த நாளில் செலுத்தலாம். எனினும், பொதுவான வங்கி சேவைகள் இன்று செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.