தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமவரம்பை உயர்த்தி நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதை தொடர்ந்து இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகைக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.