ஒமிக்ரான் அச்சுறுத்தல்; கோவை வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் கட்டாய தனிமை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:31 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் கோவை விமான நிலையம் வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் கட்டாய தனிமை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனாவின் வீரியமிக்க புதிய வைரஸான ஒமிக்ரான் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா, சீனா, ஹாங்காங் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்கள் வந்து அங்கிருந்து கோவை விமான நிலையம் வருபவர்களை 7 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்த மற்றும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்