தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (21:58 IST)
தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் தேவை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் 
 
தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று தமிழகத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், சென்னையில் சுமார் 7 ஆயிரம் பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் உடனடியாக தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்
 
அந்த கடிதத்தில் தமிழ்நாட்டிற்கு உடனடியாக கூடுதல் ஆக்சிஜனையும் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல கிரையோஜனிக் கண்டெய்னர்களையும் வழங்க கோரி பிரதமருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளின் அடிப்படையில் மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்