மும்பையை மையமாக கொண்ட நிழலுலக தாதாக்களில் முக்கியமான நபர் சோட்டா ராஜன். 1982ல் மும்பையில் படா ராஜன் என்ற தாதாவிடம் சேர்ந்த ராஜேந்திர சதாசிவ் நிகல்ஜே, படா ராஜன் இறந்த பிறகு அந்த ரவுடி கூட்டத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை ஏற்றதுடன் தனது பெயரையும் சோட்டா ராஜன் என்று மாற்றிக் கொண்டார்.
பிரபல நிழல் உலக மன்னன் தாவூத் இப்ராஹிமிற்காக வேலைபார்த்த சோட்டா ராஜன் மீது காவலர்கள், பத்திரிக்கையாளர்களை கொன்றது உட்பட 70 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் 2015ல் இந்தோனேசியாவில் பிடிபட்டார்..
பின்னர் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வரை டெல்லி திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த ஏப்ரல் 26ம் தேதி அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா இருப்பது உறுதியானது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.