பா.ஜ.க.வின் தந்திரங்களால் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்

Mahendran
வியாழன், 1 பிப்ரவரி 2024 (16:40 IST)
பாஜகவினரின் தந்திரங்களால்  எதிர்க்கட்சிகளின்   குரல்களை அடக்க முடியாது என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அமலாக்கத்துறை வைத்து மத்திய அரசு பயமுறுத்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று கூட  ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பாஜகவின் தந்திரங்களால் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒருபோதும் அடக்க முடியாது என்றும் புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி ஒரு பழங்குடி தலைவரை துன்புறுத்துவது கீழ்த்தரமான செயல் என்று தெரிவித்துள்ளார்.

இது பாஜகவின் அதிகார துஷ்பிரயோகத்தை தூண்டுகிறது என்றும் பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு ஹேமந்த் சோரன் அடிபணியாமல் உறுதியாக இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பாஜகவின் மிரட்டல்களை எதிர்த்து போராடும் ஹேமந்த் சோரனின் உறுதிப்பாடு உத்வேகம் தருகிறது என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்