தேர்தலுக்குப் பிறகு சிறந்த பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம்: திமுக எம்பி திருச்சி சிவா

Mahendran
வியாழன், 1 பிப்ரவரி 2024 (16:34 IST)
இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்று கூறினார். ஆனால் தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்றும் திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.  
 
இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால் அடுத்ததாக அவர்கள் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய காத்திருக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. 
 
நாங்கள் வந்து அந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வோம். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு தேவையான மிகச்சிறந்த அம்சங்களுடன் சிறந்த பட்ஜெட்டை நாங்கள் வந்து தாக்கல் செய்வோம் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நாங்கள் வந்து புதிய பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்று தெரிவித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்