மனைவியிடம் தகராறு; தட்டிக்கேட்ட மகனை வெட்ட முயற்சி – இறுதியில் நடந்த விபரீதம் !

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (18:41 IST)
கோவை, மேட்டுப்பாளையத்தில் தந்தையை மகன் ஒருவரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

மேட்டுப்பாளையம் சிராஜ் நகரை சேர்ந்த கருப்பசாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் 6 ஆண்டுகளாக இவரது மனைவி அமுதவள்ளியும் குழந்தைகள் இருவரும் இவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவ்வபோது குடித்துவிட்டு வந்து மனைவியிடமும் மகன்களிடமும் தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் கருப்பசாமி.

நேற்று இரவு குடிபோதையில் இருந்த கருப்பசாமி மனைவிக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்துள்ளார். அமுதவள்ளி தனது மூத்த மகன் சச்சின்குமாரை அழைத்துக்கொண்டு கணவரை பார்க்க செல்ல அங்கே கருப்பசாமி மீண்டும் பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை பார்த்து கடுப்பான மகன் சச்சின் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கருப்பசாமி ஆத்திரத்தில் சச்சினை வெட்ட முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சச்சின் அவரிடம் இருந்த அரிவாளை பிடுங்கி தந்தையை வெட்டிக் கொலை செய்துள்ளார். இது சம்மந்தமாக போலீஸுக்கு தகவ்ல் வர அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி பிணக்கூறாய்விற்கு அனுப்பியுள்ளனர். மேலும் சச்சினைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்