மதுரையில் பாத்திரக்கடை வைத்திருப்பவர் குமரகுரு. இவர் மனைவி லாவண்யா. சில தினங்களுக்கு நள்ளிரவில் லாவண்யாவை சிலர் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்தனர். இது சம்மந்தமாக போலீஸார் நடத்திய விசாரணையில் லாவண்யாவின் வீடருகே இருந்த சிசிடிவி கேமராக்கள் சோதனை செய்தபோது அவை அன்று மட்டும் செயல்படாமல் இருந்தது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும் லாவண்யாவின் வீட்டுக் கதவு உடைக்கப்படாமல் கொலையாளிகள் உள்ளே நுழைந்திருப்பதால் போலிஸாரின் கவனம் லாவண்யாவின் கணவர் குமரகுரு மேல் திரும்பியது. அவரைக் கைது செய்து விசாரணை செய்ய, லாவண்யாவைக் கூலிப்படை அனுப்பி கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். ’குமரகுரு ஆடம்பர செலவுகள் செய்து சொத்துகளை விற்பதால் அவரது தந்தை பாதி சொத்தை தனது மருமகள் லாவன்யா பேரில் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து குமரகுரு, லாவண்யாவை சொத்தை மாற்றி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுக்கவே தனது நண்பர்கள் மூலம் கூலிப்படையை ஏவி லாவண்யாவைக் கொலை செய்துள்ளார்.