சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (08:22 IST)
சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் உடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சமீபத்தில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் மீது விசா மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இதனையடுத்து அவர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
விசா மோசடி வழக்கு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்